Skip to main content

ஊட்டி மலை ரயில் இரண்டு நாட்களுக்கு இயங்காது! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Ooty mountain train will not run for two days!

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த 6ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவால்  மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

 

தொடர்ந்து ரயில்வே பொதுப்பணி ஊழியர்கள், அங்கு பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதாலும், பணிகள் முழுமையாக முடியாததாலும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனினும், குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் தொடர்ந்து இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்