Published on 12/02/2021 | Edited on 12/02/2021

ஊட்டி என்றழைக்கப்படும் உதகையில் கடந்த சில நாட்களாகவே கடும் உறைபனி நிலவி வருகிறது. இன்று (12.02.2021) உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி சுழியத்தில் (பூஜ்ஜியம்) பதிவாகியுள்ளது. குறிப்பாக உதகை தாவரவியல் பூங்காவில் மிகவும் உறைபனி நிலவுகிறது. இதனால் உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகள் 0 டிகிரி செல்சியஸ் உறைபனி காரணமாக தங்கும் விடுதிக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உதகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மேல் அரை அங்குலம் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.