Skip to main content

வாசிப்பு திறனை ஊக்குவிக்க 'ஊஞ்சல், தேன்சிட்டு' இதழ்கள் திட்டம்-7.15 கோடி நிதி விடுவிப்பு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

'oonchal, thencittu' magazines project to promote reading ability -7.15 crore financial release!

 

இந்த கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' என்ற இதழும்,  உயர்வகுப்பு மாணவர்களுக்கான 'தேன்சிட்டு' இதழும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் இந்த முயற்சி திட்டத்திற்கு 7.15 கோடி ரூபாய் விடுவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழ், ஆங்கிலத்தில் மாதமிருமுறை ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள்  வெளியிடப்படும் என முதன்மை செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு படைப்புத் தளத்தை உருவாக்க மாதந்தோறும் கனவு ஆசிரியர் இதழையும் வெளியிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Education of poor students questioned!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்று வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்பவருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 

இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் சிவராமன், மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.