Only those who have been fully vaccinated against corona at the Meenakshi Temple are allowed!

Advertisment

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள், அதாவது தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இன்று (11/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், கரோனா நோய் 3- வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே வரும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1. கரோனா தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது.

2. கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்.

3. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது.

4. வாட்ஸ் ஆப் செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்.

5. கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது.

இவ்வாறு கோயில் நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.