restriction on police station

கடந்த வருடம் உலகம் முழுவதும் கரோனா என்னும் தீவிர நோய் பரவலால் முழு முடக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் நோயின் தாக்கம் அதிகமானதன் காரணத்தால் 2020ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அதன் தாக்கத்தின் குறைவை பொறுத்து சில சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது.

Advertisment

பின்னர் மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்படன. தற்பொழுது மீண்டும் கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிற நிலையில் தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மஹராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வருவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா பரவுவதை தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கிணத்துக்கடவில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் பொதுமக்கள் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டு உள்ளதுடன், வெளியே வைத்து மனுக்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இதற்காக போலீஸ் நிலையத்தின் வெளியே போலீசார் நின்று, அங்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்க வைத்து மனுக்களை வாங்கி அனுப்புகிறார்கள். அது போன்று புகார் மனு கொடுக்க வரும்போது சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே வந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸார் கூறியதாவது, “கரோனா பரவலை தடுக்க இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.