தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழாக இருந்துவருகிறது. மூன்றாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துவருகிறார்கள்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே வணிக நிறுவனங்களைத் திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். இதனால் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.