சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை தருவதாக விளம்பரம் செய்ததை அடுத்து, அந்த சட்டையை வாங்க மக்கள் கூட்டம் குவிந்ததால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று புதிய ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. புதிய கடையை விளம்பரம் படுத்து விதமாக நேற்று திறப்பு விழா அன்று ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்படுவதாக கடை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த அந்த பகுதி மக்கள் ஒரு ரூபாய் சட்டையை வாங்க கடைமுன் வெள்ளம் போல் கூட்டம் கூடினர்.

dress shop

Advertisment

Advertisment

இந்த நிலையில் முதலில் வரும் 599 பேர்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய் சட்டை வழங்கப்படும் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஒரு ரூபாய் சட்டையை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாமல் முடங்கியது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து கடைக்கும் பாதுகாப்பு வழங்கினர். இதனால் மக்களிடம் இலவசத்துக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறையாமல் உள்ளது என்று அப்பகுதி ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.