Advertisment

வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர்? - நோயாளிகள் அவதி

only one doctor in the outpatient department of the government hospital

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளி நோயாளிகள் பிரிவில் நேற்று(16.09.2024) ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாகவும், அதனால் சிகிச்சைக்காக வந்த வெளிப்புற நோயாளிகள் (பொதுமக்கள்) நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

only one doctor in the outpatient department of the government hospital

மேலும் மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் இது போன்ற நிலை தொடர்வதாகவும், பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த அவல நிலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment
ambur Doctors
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe