Skip to main content

பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு இனி எம்.இ, எம்.டெக் மட்டும் போதாது?-அனில் சஹஸ்ரபுதே

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ மற்றும் எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

 

 Only M.E., M.Tech is not enough for assistant professor job-ANIL

 

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக பேசுகையில்,

இனி பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணியாற்ற எம்.டெக்,எம்.இ படிப்புகள் மட்டும் போதாது. 8 மோட்யுல் கோர்ஸ் எனப்படும் தொழிநுட்ப கல்வியை போதிக்க சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வருட படிப்பினை முடித்தவர்களே பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும் என கூறியுள்ளார். அடுத்த வருடம் முதல் இந்த நடைமுறை செயலாக்கம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்  

பிஎஸ்சி படித்தவர்கள் எப்படி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற எப்படி பிஎட் படிக்க வேண்டுமோ அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக இனி அந்த புதிய சிறப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மேலும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த சிறப்பு படிப்பை முடிக்கவில்லை எனில் தற்போது பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்ப்படுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.