ADVERTISEMENT

'வழக்குகளில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் மட்டுமே...' -உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பு!

04:42 PM Mar 25, 2020 | kalaimohan

கரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் அனைத்து காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதால், முன் ஜாமீன் வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் அரசு வழக்கறிஞரைச் சந்தித்து அறிவுறுத்தல் வழங்க இயலாத சூழல் உள்ளதால், அவர்கள் உயர் நீதிமன்றம் வருவதற்குப் பதிலாக, அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மாவட்ட முதன்மை அல்லது அமர்வு நீதிமன்றங்களைக் காவல்துறை அணுகுவது சுலபமாக இருக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதனைக் கருத்தில் கொண்டு மிகவும் அவசியமாக முன் ஜாமீன் வேண்டுமென நினைக்கும் மனுதாரர் அல்லது வழக்கறிஞர், வழக்கு தொடர்புடைய எல்லைக்குட்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றங்களை முதலில் அணுக வேண்டும்.

அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் அல்லது மதுரைக் கிளையை அணுக வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT