Advertisment

இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது– கே.எஸ்.அழகிரி பேட்டி

The only education system in India is impossible - KS Alagiri interview

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செப்டம்பர் 13ந்தேதி நிகழ்ச்சி ஒன்றுக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்திருந்தார். அப்போதுசெய்தியாளர்களை சந்தித்து பேசினார், பீகாரில் ரகுவன்பிரசாத் சிங் என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்துள்ளார். நான் எம்.பியாக இருந்தபோது நானும் அவரும் நண்பரானோம். ஆரம்பத்தில் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார், பின்னர் ஆர்.ஜே.டி இயக்கத்தில் இணைந்தவர் அவருக்கு இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வு தமிழகத்தில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நம் குழந்தைகள் அச்சத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இளைஞர்கள் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டும், அச்சம் ஒருபோதும் தீர்வாகாது. அவ்வையார் அச்சத்தை தவிர் என்றார்.

தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு நமக்கு பொருந்தாது. நமது குழந்தைகள், குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் படித்தது வேறு, நீட் தேர்வு என்பது வேறு. நம் குழந்தைகள் படித்தது நீட் தேர்வில் வராது. ஒரேநேரத்தில் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது. பல்வேறு சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ள வாழும் மக்கள் உள்ள நாடு இது. மிகுந்த பொருட்செலவில் தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும், எந்த வித வசதியும் இல்லாத ஓட்டு பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான தேர்வு என்பது தேவையற்றது.

Advertisment

நீட் தேர்வு தேவையில்லை என்கிற மாநிலங்கள் அதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எங்கள் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி சொல்லியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தீர்க்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியுள்ளது வரவேற்கதக்கது. தமிழகரசு, மத்தியரசிடம் பேசி நம் மாநில எண்ணத்துக்கு கொண்டு வரவேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியரசு திட்டமான பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என எங்கள் கட்சி எம்.பி விஷ்ணுபிரசாத் ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மீது மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி துறை அமைச்சர், முதலமைச்சர் என யாரும் பதில் சொல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பதற்கு காரணம் நாடு முழுவதும் கற்கும் முறை, கற்பிக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்போது எப்படி ஓரே தேர்வை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி செய்தால் புதிய கல்விக்கொள்கை காலப்போக்கில் குலக்கல்வியாக மாறிவிடும். இந்த கல்வி முறை ஏராளமான தொழிலாளர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், பொறியாளர்களை உருவாக்க முடியாது, ஏராளமான கூலிகளை வேண்டுமானால் உருவாக்கலாம், ஏராளமான மருத்துவர்களை உருவாக்க முடியாது.

சமூக பிரச்சனைகளை நான்கு அதிகாரிகள், நான்கு அரசியல்வாதிகள் எடுக்ககூடாது. கல்வியாளர்கள், ஊடகம், பொதுமக்கள் விவாதத்துக்கு பின்பு எடுக்க வேண்டும், அதனால் தான் நாம் எடுக்கவேண்டும்.

விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் விவகார விசாரணை சிபிசிஐடிக்கு பதில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை என்றார்.

corona virus congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe