தமிழக அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க மட்டும்தான் பாராட்டும் வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமசித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்றுவரும்தமிழகம் மீட்போம் என்ற தி.மு.க கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உரையாற்றியபோது, தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல் காட்சி நடத்தி வருகிறது அதிமுக அரசு. தலைவரும், பொதுச் செயலாளரும் இல்லாதகட்சி அதிமுக. தமிழக அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க மட்டும்தான் பாராட்டும் வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள். கரோனாவால் ஒருவரையும் பாதிக்க விடமாட்டோம் என்றார் முதல்வர் ஆனால்ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.