Only 15 shops are allowed to open in Tirupathur district

Advertisment

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 55ம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 கடைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 கடைகளையும்திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ரெட் அலர்ட் பகுதியில் உள்ள கடைகள் திறக்க அனுமதியில்லை. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 17 கடைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 23 கடைகளும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடை வைத்துள்ள பகுதிகளில் இருந்து வரும் நபர்களுக்கு மட்டுமே அவர்களின் ஆதார்கார்டு வாங்கி பார்த்துவிட்டு அதன்பின் டோக்கன் வழங்கி பின்னர் மது வழங்க வேண்டும், பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள்.

அதேபோல் டோக்கன் வழங்கும்போதும், மதுவிற்பனை செய்யும்போதும் 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும், கைகளில், முகத்தில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்களும் அப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.