ADVERTISEMENT

ஆன் லைனில் மருந்து விற்பனை செய்ய இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு

04:12 AM Nov 01, 2018 | Anonymous (not verified)



ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT


ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பதும் சட்டவிரோதம் என்றுள்ள நிலையில், அங்கீகாரம் இல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்துகள் விற்பனை செய்பதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இப்படி விற்பனை செய்வதன்மூலம் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளதாகவும், முறையான மருந்து கிடைக்காததால் நோயாளிகளுக்கு உடல் நலக்கேடு ஏற்படும் எனவும் குற்றம் சாட்டியுள்ளானர். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடைகளில் மட்டுமே மருந்து விற்பனையை மட்டுமே அனுமதித்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


ஆன்லைலில் மருந்துகள் வாங்குவதும் விற்பனை செய்வதும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது சட்டவிரோதமானது என அறிவித்து, முழுமையாக தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு முடியும் வரை ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதிக்க கேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர். இது குறித்து மத்திய மாநில சுகாதார துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT