Skip to main content

ஆன்லைனில் ஆற்றுமணல் விற்பனை... புதிய நெறிமுறைகள் குறித்து அரசாணை!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Online sale of river sand ... Government of Tamil Nadu Government!

 

மணல் விற்பனை தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

 

இதற்கான புதிய அறிவிப்புகளைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இனி ஆன்லைனில் 'தமிழ்நாடு இணைய மணல் சேவை' என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி மணல் பெறலாம். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மணலுக்கு விண்ணப்பிக்கலாம். மக்களின் பயன்பாட்டிற்குப் போக இருப்பை பொறுத்து, பதிவு செய்துள்ள லாரி உரிமையாளர்களுக்குப் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை மணல் வழங்கப்படும். முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க 24 மணிநேரமும் சிசிடிவி மூலம் ஆற்றுமணல் விற்பனை கண்காணிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Online sale of river sand ... Government of Tamil Nadu Government!

 

மேலும் ஒரு யூனிட் மணலின் விலையை 1,000 ரூபாயாகவும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதேபோல் குவாரிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு மணல் அதிகவிலைக்கு விற்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மீண்டும் மிசா வரும்” - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Minister Duraimurugan warns that misa will come again

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவித்ததையடுத்து இன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, “பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததைபோல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது ஒரு வயது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து சென்றார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களை பார்க்க முடியவில்லை. மூன்று மாதம் கழித்து எனது மனைவி எனது ஒரு வயது மகன் கதிரானந்தை சிறைக்கு அழைத்து வந்தார்.

அவனைப் பார்த்தபோது கட்டித் தழுவி கொள்ளலாம் என ஏங்கினேன். கட்டி தழுவ முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி குழந்தையை தொடக்கூடாது. நீ அவனை ஏதாவது (கொலை) செய்து விடுவாய் என கூறி தடுத்துவிட்டார். நானா எனது மகனை ஏதாவது செய்து விடுவேன் என அப்போதே கண் கலங்கினேன். எனது மகன் கையை நீட்டி அப்பா... அப்பா... என கூறினான்.

அதற்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்த அளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள்” என கண் கலங்கி நா தழுதழுத்த குரலில் பேசினார்.

எங்களைப் பார்த்து வாரிசு அரசியலென மோடி பேசுகிறார். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஜனநாயகக் குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறார்கள். ஆக இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போல் ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் என பாரதிய ஜனதாவினர் கருதுகிறார்கள். நீங்கள் போடுகிற ஓட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடுகிற ஓட்டு. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மிசா வரும் என பேசினார்.