
மணல் விற்பனை தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான புதிய அறிவிப்புகளைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாகவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இனி ஆன்லைனில் 'தமிழ்நாடு இணைய மணல் சேவை' என்ற இணையதளத்தில்பணம் செலுத்தி மணல் பெறலாம். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மணலுக்கு விண்ணப்பிக்கலாம். மக்களின் பயன்பாட்டிற்குப் போக இருப்பை பொறுத்து, பதிவு செய்துள்ள லாரி உரிமையாளர்களுக்குப் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை மணல் வழங்கப்படும். முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க 24 மணிநேரமும் சிசிடிவி மூலம் ஆற்றுமணல் விற்பனை கண்காணிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு யூனிட் மணலின் விலையை 1,000 ரூபாயாகவும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதேபோல் குவாரிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு மணல் அதிகவிலைக்கு விற்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)