Advertisment

லோன் ஆப்பில் கடன்வாங்கி ஆன்லைன் ரம்மி... தொடரும் தற்கொலை!

chennai

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால்தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு ஆன்லைன் லோன் ஆப்பில்கடன் பெற்று ரம்மி விளையாண்டுவந்த நிலையில் கடனை கட்ட முடியாமல் இருந்த பாண்டியனின் குடும்பத்தாரின்புகைப்படத்தைசித்தரித்து வெளியிட்டதால் மனஉளைச்சலில்இருந்த பாண்டியன் தற்கொலை செய்துகொண்டதாகமுதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் லோன் ஆப் பற்றி தமிழக டிஜிபி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னையில் ஒரு இளைஞர் ஆன்லைன் ரம்மி மற்றும் லோன் ஆப் உள்ளிட்ட இரண்டு செயலிகளால் தற்கொலை செய்துகொண்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

awarness Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe