Advertisment

கடன் தொல்லை... கண்டிப்பு... ஐ.டி இளைஞரின் உயிரைப்பறித்த 'ஆன்லைன் ரம்மி'

online rummy incident in thirupathur

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை கிராமத்தைச்சேர்ந்தவர் ஆனந்தன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் தனியார்ஐடிநிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

Advertisment

ஓய்வு நேரத்தில்செல்போனில்ஆன்லைன்ரம்மிவிளையாட்டு விளையாடிவந்துள்ளார்.ஒருகட்டத்தில்பணம் கட்டி விளையாடத் தொடங்கியுள்ளார், அதில்பலலட்சம் ரூபாய் இழந்துள்ளார். நண்பர்கள், உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.அதில் பெரியளவில் நட்டத்தை அடைந்துள்ளார். இதனால் வாங்கிய கடனை திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

கடன் தந்தவர்கள் பணத்தைக்கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். இதுகுடும்பத்தாருக்குத்தெரிந்து ஆனந்தனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். அப்படியும்ஆன்லைன்ரம்மிவிளையாடுவதை விடவில்லையாம். அனைவரும் கண்டிப்பது அதிகமானது, கடன் தொல்லை போன்றவற்றால் அதிருப்தியான ஆனந்தன் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

இதனைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அழுதுள்ளனர்.இதுகுறித்ததகவல் வாணியம்பாடிதாலுகாகாவல் நிலையகாவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி காவல்துறையினர் ஆனந்தன்உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து இந்தசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident online cheating police thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe