சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் விளையாட்டுக்கள் பற்றிய ப்ரோமோஷன்களை நாம் பார்த்திருப்போம். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் விளையாடுங்கள் இவ்வளவு சம்பாரிக்கலாம். அவர் எவ்வளவு சம்பாரித்துள்ளார் பாருங்கள் என பல ஆன்லைன் கேம்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆன்லைன் ரம்மி. இப்படி ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கடைசியில் கந்துவட்டிக்குகடன் வாங்கி ரம்மி விளையாண்டு தோற்று இறுதியில் தற்கொலையில் முடிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

rummy

கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்.எல்.புரத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். இவரது மனைவி திவ்யா. இருவரும் சென்னை பெரும்பாக்கத்தில் தங்கி ஐடியில் பணிபுரிந்து வந்தனர். ஐடிஊழியரான அருள்வேல் மாதம் ஒரு லட்சம் ரூபாயும், மின் பொறியாளரான திவ்யா மாதம்50 ஆயிரம் ரூபாயும்சம்பளம் பெற்று வந்த நிலையில் அருள்வேல் அலுவலகத்தில்பணி நேரத்தில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

rummy

Advertisment

ஆரம்பத்தில் ரம்மி சூதாட்டத்தில் ஜெயித்த அருள்வேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்ததாக கூறப்படுகிறது. விட்ட பணத்தை பிடிப்பதற்காக பண்ருட்டியில் உள்ள அரசியல் செல்வாக்குமிக்க பைனான்சியர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் கடனாகப் பெற்று அதனையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பறிகொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் கவனம் இல்லாததால்பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை எப்படிசெலுத்துவது என்று குழம்பிப் போன அருள்வேல் தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகனுடன் சொந்த ஊரான பண்ருட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அருள்வேலின்மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட அருள்வேல் தனது தந்தை சிற்றரசு மற்றும் ராஜலட்சுமி ஆகியோருடன் பண்ருட்டியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பைனான்சியர் கொடுத்த பணத்தை கேட்டு ஆபாசமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

​    ​rummy

Advertisment

கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியதால் இந்த தொகையை எப்படி கட்டுவது என்று அருள்வேலின்தாய் ராஜலட்சுமியும் தந்தை சிற்றரசும் தவித்து வந்தனர். ராஜலட்சுமி ஓய்வு பெற்ற செவிலியர் என்றும் கௌரவமான குடும்பத்தை என்றும் கூறப்படுகிறது. கந்து வட்டி கும்பலின் ஆபாச மிரட்டலால்மனம் நொந்து போன ராஜலட்சுமியும் அருள்வேலும்மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

​    ​rummy

தந்தை சிற்றரசு வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கந்து வட்டி கும்பலின் மிரட்டல் குறித்து ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு பன்ருட்டி காவல் நிலையத்தில் சிற்றரசு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். அரசியல் செல்வாக்கு இருப்பதால் அந்த பைனான்சியர் மீண்டும் வீடு புகுந்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் அருள்வேலும்அவரது தாய் ராஜலட்சுமியும் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

​    ​rummy

வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் இருந்து ராஜலட்சுமி கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது.அதில் கடிதத்தில் மகன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்தது குறித்தும் கந்துவட்டி பைனான்ஸ் மிரட்டல் குறித்தும் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.