
ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18/08/2022) காலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்தை இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், கூட்டத்திற்கு பின் தமிழக அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.