Is Online Rummy Banned? Consultation in cabinet meeting

Advertisment

தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

காலை 09.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, நாசர், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

Advertisment

அமைச்சரவைக் கூட்டத்தில் அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே இந்த கூட்டம் நடந்தது.

இதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட இருக்கும் மசோதாக்கள் குறித்தும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவதற்கான சட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் ஒரு சில விளையாட்டுகளுக்கு மட்டும் முழுவதும் தடை விதிக்க இருப்பதாகவும் மற்ற விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த இருப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது.

Advertisment

அதோடு மட்டும் இல்லாமல் தமிழக சட்டப்பேரவை கூடும் தேதியையும் சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் ஓய்வு பெற்ற நீதிபதிசந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆன்லைன் விளையாட்டை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.