Advertisment

உயிரைப்பறித்த ஆன்லைன் நூடுல்ஸ்?-திருச்சியில் பரபரப்பு

 Online noodles that have taken their lives?-Crazy in Trichy

Advertisment

ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெஃபி ஜாக்லின். பதினோராம் வகுப்பு படித்து வந்த இவர் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி அதனை இரவில் சமைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. காலை பெற்றோர்கள் சிறுமியை எழுப்பிய பொழுது மாணவி உயிரிழந்துள்ளார். சிறுமி திடீரென உயிரிழந்தது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதேநேரம் அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நூடுல்ஸால்தான்சிறுமி உயிரிழந்ததாக தகவல்கள் பரவ, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

noodles trichy
இதையும் படியுங்கள்
Subscribe