Advertisment

ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி; 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Online loan Tragedy happened to a 6-year-old girl

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் என்ற கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். நூல் மில் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு விஜி என்ற மனைவியும் 6 வயதில் மகள் ஒருவரும் இருந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஆன்லைன் செயலி மூலம் கடன் கொடுக்கப்படும் என்றவிளம்பரத்தை பார்த்துள்ளார். இதனை நம்பி ராஜு அந்தக் கடன் கொடுப்பதாகக் கூறப்பட்ட நபர்களைத்தொடர்பு கொண்டுள்ளார்.

Advertisment

அப்போது இரண்டு லட்ச ரூபாய் கடன் வேண்டும் என்று ராஜூ கூறியுள்ளார். அதற்கு எதிர் முனையில் இருந்தவர்கள் இணையத்தில் சேவை கட்டணமாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்த கூறியிருக்கிறார்கள். அதனை நம்பி ராஜீவும் 40 ஆயிரம் ரூபாயை தன் நண்பர்களிடன் கடனாக பெற்று செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு கடன் தருவதாக உறுதி அளித்தபடி 2 லட்சம் ரூபாய் ஆன்லைன் செயலியில் கூறியவர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

Online loan Tragedy happened to a 6-year-old girl

இதனையடுத்து நேற்று (30.05.2024) இரவு ராஜீவ் தனது குடும்பத்தினருடன் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது அவரது 6 வயது குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அதே சமயத்தில் அவரின் பெற்றோருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர்3 பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அப்போது மூவரும் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரும்,மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

இந்நிலையில் இன்று (31.05.2024) காலை 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே சமயம் ராஜு மற்றும் அவரது மனைவி விஜி அகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைனில் கடன் தருவதாகக்கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்ததது தெரியவந்துள்ளது. இந்தச்சம்பவத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்ததுதிருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Online loan Tragedy happened to a 6-year-old girl

மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கடன் தராததால் ராஜீவ் மன உளைச்சல் ஆகியுள்ளார். அதே சமயம் கடன் வாங்க முன்பணமாக கடன் கொடுத்த நண்பர்களும் ரூ.40 ஆயிரத்தைக் கேட்டதால் வேறு வழியின்றி குடும்பத்தோடு ராஜீவ் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

police palladam Tiruppur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe