Skip to main content

ஆன்லைன் கேம் மோகம்; விபரீத முடிவெடுத்த மாணவன்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

online game incident for perambalur district college students 

 

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் பகுதியில் உள்ள அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் பாலகுமார் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த பாலகுமார் நீண்ட நேரம் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவரின் தாயார் பாலகுமாரை கண்டித்துள்ளார். இதனால் பாலகுமார் மனமுடைந்து விரக்தியில் இருந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது பாலகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

இதனைக் கண்ட பாலகுமாரின் தாத்தா அருகில் இருந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அங்கு இருந்தவர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் ஏற்கனவே பாலகுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். பாலகுமார் தற்கொலைக்கு முயன்ற போது அப்போதே மாணவனின் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கேம் மோகத்தால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” - அருண் நேரு உறுதி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"I will act as your house son" - Arun Nehru assured

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

"I will act as your house son" - Arun Nehru assured

அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.