Advertisment

முறைகேடாக எழுதிய தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு! 

exam

Advertisment

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த செப்டம்பர் 24 முதல் 29 வரை நடத்திய தேர்வுகளை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். ஆன்-லைனில் நடத்தப்பட்ட இத்தேர்வில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த முறைகேடுகள், தொழில் நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதால் 3000 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய வீடியோக்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வீடியோவை ஆய்வு செய்யும் குழுவின் முடிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியடப்படும் என்றும் தெரிவிக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.

Anna University exam online
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe