Advertisment

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்... பள்ளிக்கல்வித்துறை தகவல்!

 Classes online for 10th, 11th, 12th grade students ... School Education Information!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என முன்னர்அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைனில்வகுப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லாததால் திருப்புதல் தேர்வு தேதிகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

education TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe