dfgdsagf

Advertisment

திருச்சி, வயலூர் சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் ராமசாமி (78). கடந்த 26-ம் தேதி ராமசாமி ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை உறுதிப்படுத்துவதாகக் கூறி வந்த செல்போன் அழைப்பில் எதிர் திசையில் பேசிய நபர் ரூ.13,000 அனுப்புங்கள் செல்போன் உங்கள் வீடு தேடி வரும் என்று கூறியுள்ளார்.

இவரும் அதற்கு சம்மதித்து பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார். 3 நாட்கள் ஆகியும் செல்போன் வராததால் அச்சமடைந்த ராமசாமி திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ராமசாமி இழந்த ரூ.13 ஆயிரத்தை மீட்டு ராமசாமியிடம் ஒப்படைத்தனர்.