Advertisment

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு! 

Online Booking for Jallikattu Tournaments

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும்.

Advertisment

இந்நிலையில் வரும் ஜனவரியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Meeting online Alanganallur madurai jallikattu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe