Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநியோகம்! 

Online Application Distribution for Annamalai University Admission!

Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்சேர்க்கைக்கானஇணையவழி விண்ணப்பம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்து கொண்டு நடப்பு கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பவிநியோகத்தைதொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ்,புல முதல்வர்கள், இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிரத்தின சம்பத்மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் 08.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe