ஏழை, பணக்காரன், பெற்றெடுத்த விவசாயி என பேதமின்றி கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம்! 

உரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை அது தான் வெங்காயம். இதையே அடிப்படையாகக கொண்டு சீர்திருத்ததக் கருத்துகளைப் பரப்பும் தந்தை பெரியார் கூட கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையில் வெங் ங் ங் காயம் என்பார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வசனத்திலும் பாட்டிலும் நக்கலும் கிண்டலுமிருந்தாலும் உற்றுப்பார்த்தால் அது சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.

Onions that make the poor, rich, and born as a farmer shed tears!

தேசத்தில் புகை வண்டி (ரயில்) முதன்முதலாக அறிமுகமாகி இருப்புப்பாதையில் ஓடியதைப் பார்த்த கலைவாணர் பாடுவர்.

ரயிலே, ரயிலே, ஏ ரயிலே.

நீ டிக்கெட் இருக்குறவனையும் ஏத்துற. இல்லாதவனையும் ஏத்துற என்று பாடும்போது சினிமாக் கொட்டகை சிரிப்பால் அதிரும். அடுத்துச் சொல்வார். ஏ ரயிலே நீ வந்த அன்னைக்கே அனைவரும் சமம்ணு சமத்துவத்தைக் கொண்டுட்டு வந்திட்டே என்பார். இந்தக் கருத்தைக் கொண்டதுதான் அந்தப் பாட்டு. இத்தனை பெரிய கருத்தை வள்ளுவரைப் போல ஒன்றரை அடியில் சொல்லி விடுவார் கலைவாணர்.

Onions that make the poor, rich, and born as a farmer shed tears!

தேசத்தில் தற்போது ஏழை பணக்காரர் ஜாதி, மத வார்க்க இன பேதமில்லாமல், ஏன், அதைக் கருவாக்கி வளர்த்து ஈன்றெடுத்த விவசாயிகள் என்றில்லாமல் வெங்காய விலை அனைவரின் கண்களையும் கண்ணீர் சிந்த வைக்கிறது. விலை ஏற்றம் கண்ணீரை வரவழைப்பது நியாயம். அதைப் பயிரிட்ட விவசாயிகளோ, அறுவடை நேரத்தில் அழுகியது கண்டு அரற்றுகிறார்கள். நஷ்டப்பட்டுநிற்கிறார்கள். அதுபோன்ற சம்பவம் தான் நெல்லையை ஒட்டிய மானூர் பகுதிகளில் நடந்துள்ளது.

Onions that make the poor, rich, and born as a farmer shed tears!

இந்தப் பகுதியின் களக்குடி, பிராஞ்சேரி, பள்ளமடை கிராமத்தில் பல விவசாயிகள் வழக்கம்போல் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். விலை, ஏற்றம் அவர்கள் வயிற்றில் பாலைவர்த்த சிறிது நேரத்தில் அவர்களின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

நன்கு விளைந்த நிலையில் அறுவடைக்குச் சென்ற விவசாயிகள் பயிரிகள் அனைத்தும் அழுகும் நிலையைக் கண்டு பதறிப் போய் பயிரிட்ட வெங்காயச் செடிகளைப் பிடுங்கிய போது வேரில் பலன் தர வேண்டிய மொத்த வெங்காயமும் வயலின் ஈரப்பதம் காரணமாக அழுகிப் போயிருந்தைகட கண்டு வேதனையில் துவண்டு போனார்கள்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சுப்பையா போன்றவார்களோ.

வழக்கம் போல புரட்டாசி, சித்திரை காலங்களில் இரண்டு மகசூல் வெங்காயம் பயிரிடுவோம். ஒரளவு விலை கிடைக்கும். கடந்த புரட்டாசியில் நான் உட்பட எங்கள் பகுதி விவசாயிகள் 20 ஹெக்டேருக்கும் மேலான வயலில் வெங்காயம் பயிரிட்டிருந்தோம். ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்திருந்தோம். எங்கள் தலைவிதி. இந்தாண்டு பெய்த மழையின் தாக்கத்தால் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கிவிட்டது. அதன் காரணமாகவும், சில இடங்களில் விளைச்சலின்றியும் மொத்த வெங்காயமும் அழுகிவிட்டது.

Onions that make the poor, rich, and born as a farmer shed tears!

நன்கு விளைந்திருந்தால் 6 ஆயிரம் கிலோ உற்பத்தியாகும்.கிலோவுக்கு எங்களுக்கு 35 ரூபாய் கிடைத்தாலும் போதும் நல்ல லாபம்தான். நடப்பாண்டில் நல்ல விலையிருந்தும் அனுபவிக்க முடியல. போச்சே. காப்பீடு வழங்கப்படாததால் தோட்டக்கலைத்துறையோ இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்கிறார்கள். எங்கள் நிலையைப் பார்த்தீர்களா? என்றார்கள் கண்கள் குளமாக.

இந்தச் செய்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைத்தான் பாகுபாடின்றி வெங்காயம் செய்திருக்கிறது.

Farmers nellai onion price raised
இதையும் படியுங்கள்
Subscribe