Advertisment

'கணினி வாங்கினால் வெங்காயம் இலவசம்' - வைரல் புகைப்படம் இதோ!

வெங்காயத்தை உரிக்காமலேயே கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது. வெங்காய விலை உயர்வு அரசியல் தளத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெங்காய விலை உயர்வு குறித்து எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது சரமாரியான கேள்விகளை வைத்து வருகின்றன.

Advertisment

onion prices-Computer shop

இதையடுத்து வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், வெங்காயத்தின் புழக்கத்தை அதிகரிக்கவும் சில்லறை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. தற்போது வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் கடலூரில் பிள்ளையார் கோயில் அருகே இயங்கும் கணினி விற்பனைக் கடையின் விளம்பரப் பதாகையில், ஒரு கணினி அல்லது லேப்டாப் வாங்கினால், ஒன்றரை கிலோ கிராம் வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

computer onion onion price control
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe