Advertisment

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை

nn

வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் ஒரு பக்கம் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 120 ரூபாய் வரை வெங்காயம் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

ஒரு வார காலமாக வெங்காய வரத்து குறைவாக இருந்ததால் தற்பொழுது வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளது. மேலும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

onion price vegetables
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe