Skip to main content

வெங்காயம் விலை 3 நாட்களில் குறையும்- தமிழக அரசு!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி. மேலும் வெங்காயத்தின் விலை தொடர்பான நிகழ்வுகளை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எங்கும் பதுக்கல் இல்லாமல் மக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைக்க நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

onion price control with in 3 days tn govt


மேலும் நாசிக் மற்றும் ஆந்திராவிலிருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதால் வெங்காயம் விலை குறையும் என்று நம்பிக்கை தமிழக அரசு தெரிவித்துள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

லியோ சிறப்புக் காட்சி - தமிழக அரசு கட்டுப்பாடு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

leo special shows Tamil Nadu Govt Guidance

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லியோ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.

 

சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு. சிறப்புக் காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு. மேலும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 

 

Next Story

"என்னை நியமித்தமைக்கு நன்றி" - முதல்வருக்கு நாசர் கடிதம் 

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Nasser wrote letter thanked cm Stalin

 

தமிழ் திரைத் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரால் "கலைஞர் கலைத்துறை வித்தகர்" என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.  மேலும் இந்த விருது வழங்கும் குழுவிற்கு எஸ்.பி முத்துராமன் தலைவராகவும், நாசர் மற்றும் கரு . பழனியப்பன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் விருது வழங்குபர்களை தேர்தெடுக்கும் குழுவில் தன்னையும் உறுப்பினராக சேர்த்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், "தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதி முக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் "கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது" மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். "கலைமாமணி" என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் இந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டு விருது பெரும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்படும். இவ்விருது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.