Advertisment

ஒ.என்.ஜி.சி. குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - திருவாரூர் அருகே பரபரப்பு

விளை நிலங்களை பாதிக்கும் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கூடூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி முக்குளத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் வெள்ள குடியில் தொடங்கி அடியகமங்கலம் வரை பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

Advertisment

விளை நிலங்களில் ஒ.என்.ஜி.சி. குழாய்கள் எண்ணெய் எடுத்து செல்லும்போது அடிக்கடி வெடிப்பு, கசிவு ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தின் எதிரொலியாக, குழாய்கள் பதிக்கும் பணி தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள முசகுளம் கிராமத்தில் இன்று குழாய்கள் பதிக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் இயந்திரங்களோடு வந்தது. அதனை கண்ட பொதுமக்கள் "குழாய் பதிப்பதால் விளைநிலங்களை பாதிக்கிறது, அதனால் உங்களை பதிக்கவிடமாட்டோம்," என கூறி 50 க்கும் மேற்பட்டோர் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்த்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணிகள் மேற்கொண்டிருந்த ஊழியர்கள் பணிகளை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

Thiruvarur struggle people
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe