Advertisment

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு - விவசாயிகள் அதிர்ச்சி!

ongc ground

Advertisment

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில், கச்சா எண்ணெய் பரவியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்து வருகிறது. எருக்காட்டூரில் 7 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் வெள்ளக்குடியில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் தனசேகரன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் விளைநிலங்களில் பரவியது. சுமார் ஒரு ஏக்கர் வயலில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதால், இனி அதில் பயிர்களை சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தகவலறிந்து ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் கச்சா எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gail ongc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe