Advertisment

விளைநிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு... பொதுமக்கள் அச்சம்!

ONGC pipe break in farmland ... Public fears!

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறுவது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisment

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பனையூரில் சிவகுமார் என்பவரது விவசாய நிலத்தில் நேற்று (29.06.2021) இரவு இந்த விபத்து ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறிவருகிறது. எனவே ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குழாய் உடைப்பை சரி செய்து இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போதுவரை எந்த ஒரு ஓஎன்ஜிசி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

இதுவரை இதுபோன்ற உடைப்புகள் அப்பகுதியில்ஏற்படவில்லை, ஆனால் இப்படி புதிதாக ஏற்பட்டுள்ள இந்த உடைப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விளைநிலங்களில் இருக்கும் ஓஎன்ஜிசி குழாய்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Farmers ONGC wells Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe