Skip to main content

ஓ.என்.ஜி.சி. எண்ணை கிடங்கில் தீ; அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சேமிப்புக் கிடங்கு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அச்சமடைந்த அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

t

 

திருவாரூர் அருகே வெள்ளக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு இருக்கிறது. அந்த இடத்துக்கு அருகிலேயே ஏராளமான மக்கள் குடிமனைகளோடு வசித்து வருகின்றனர்.   இந்த நிலையில் எண்ணை சேமிப்புக்கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ள கருவேலங்காடுகளில் திடீரென தீப்பிடித்து பரவியது. இந்த தீ மளமளவென  எண்ணை கிடங்குவரை பரவியது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் பெரும் சிரமத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

t

 

எண்ணை கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர், பொருளாதார சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும், அதனை தீயணைப்புத்துறையினர் தடுத்துள்ளனர். தீயைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், " மத்திய அரசும் மாநில அரசும் இந்த குடியிருப்புகளை வேறு பகுதிகளுக்கு பட்டாவுடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும். இல்லை என்றால் எண்ணை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்றவேண்டும்," என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.a

சார்ந்த செய்திகள்

Next Story

"மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று உண்ணாவிரத அறிவிப்பு வாபஸ்"- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"Withdrawal of the fast notice after taking the oath of the District Collector"- pR Pandian's announcement!

 

திருவாரூரில் பெரியக்குடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கிணற்றை நிரந்தரமாக மூட அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி கிணற்றில், கடந்த 2013- ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டதால், போராட்டத்திற்கு பின்னர், அந்த கிணறு மூடப்பட்டது. அந்த கிணறு மீண்டும் திறக்கப்படவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்த நிலையில், அந்த கிணற்றை முற்றிலுமாக மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மே மாதத்திற்குள் ஹைட்ரோ கார்பன் கிணற்றை முற்றிலுமாக மூடுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். 

 

Next Story

எரிபொருள் குழாய் உடைந்து விவசாய நிலம் சேதம்!  

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

ONGC Damage to agricultural land due to broken pipe!

 

திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். அதேநேரம் இந்தப்பகுதியைச் சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கான குழாய்களும் குறுக்கும் நெடுக்குமாகப் பதித்துள்ளனர். அப்பகுதியில் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.

 

இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவரது நிலத்தின் வழியாகச் செல்லும் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஒரு ஏக்கர் அளவிற்கு விளைநிலம் முழுவதும் பரவி, அந்நிலம் பொட்டல் நிலமாக்கியுள்ளது. அதில் விதைக்கப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் முழுவதும் சேதமாகியுள்ளன. 

 

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சேதமடைந்த விளைநிலத்தைப் பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமானது இல்லை எனக் கூறிவிட்டு அந்த எண்ணெய்யின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். வட்டாட்சியர் நடராஜன் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

 

இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிறார்.