Advertisment

வைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்தியஇறையாண்மைக்கு எதிராகமதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

one year jail for Vaiko  ... court verdict!

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றநீதிபதி சாந்தி, வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்தார். இந்த குற்றத்திற்கான தண்டனையை இன்றே அறிவிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைக்க அவருக்கு ஓராண்டு சிறையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisment

மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக மதிமுக சார்பில் ஒருமனதாக அவர் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நாளை மனுதாக்கல் செய்வதாகயிருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் வைகோ மனுதாக்கல் செய்துள்ளார்.

jail vaiko verdict
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe