
நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலேயே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே ஆஜர்படுத்த வந்த பொழுது ஆறு பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் தாக்கி விட்டுத்தப்பி ஓடினர்.ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த லோகேஷை போலீசார் மீட்டுசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை காரணமாக டிஎஸ்பி பரத் தலைமையில் தனிப்படைஅமைத்துபோலீசார் குற்றவாளிகளைத்தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராகுல், தனசேகரன், பிரவீன்குமார், லோகேஷ், அரவிந்த் குமார், ரூபேஷ், பிரான்ஸ், மோசஸ் உள்ளிட்ட ஏழு பேர் இந்த கொலை தொடர்பாகநீதிமன்றத்தில் ஆஜராகினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)