Advertisment

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி! 

One person passed away in a cracker factory explosion near Chittur

விருதுநகர் மாவட்டம் - சாத்தூரை அடுத்துள்ள பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று (15-ஆம் தேதி) காலை பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும்ரசாயனமூலப் பொருட்களைக் கலவை செய்யும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரசாயனமூலப்பொருளில்ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ்(36) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

மற்ற தொழிலாளர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அந்தப் பட்டாசு ஆலையின் ஒரு அறை தரைமட்டமானது. இவ்விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர், சம்பவ இடத்தில்விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிமுடிந்து பட்டாசு உற்பத்தி தொடங்கிய சில நாட்களிலேயே வெடிவிபத்து ஏற்பட்டதும், தொழிலாளி ஒருவர் பலியானதும், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
crackers Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe