Advertisment

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

One person passed away accident on the National Highway in Karur

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.

Advertisment

சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு மீண்டும் வேலாயுதம்பாளையம் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். அப்போது அருகில் இருந்த நபர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார், இளைஞரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe