சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மறைமலைநகரை சேர்ந்த முதியவர் மோகன் (வயது 60) என்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை வீட்டில் இருந்து நேற்று (27.05.2025) இரவு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.