One person lose their live in an accident while the tractor was cleaning

ஈரோட்டில் டிராக்டர் சுத்தம் செய்தபோது விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு கதிரம்பட்டி, சூர்யா நகர், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பர்வதம். இவர்களது மகன் சண்முகசுந்தரம் (43). இவர் இரண்டு ஜே.சி.பி மற்றும் ஒரு டிராக்டர் சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். சண்முகசுந்தரத்துக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 மாதமாக அவரது மனைவி அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம் வீட்டுக்கு மேற்புறம் உள்ள காலியிடத்தில் நிறுத்தியுள்ள டிராக்டர் மற்றும் ட்ரெய்லரை சுத்தம் செய்துவிட்டு வருவதாகச் அவரது தாயிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் சண்முகசுந்தரத்தின் தந்தை அந்த வழியாக வரும்போது மேற்படி சண்முகசுந்தரம் ட்ரெய்லருக்கு அடியில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் தான் மருத்துவமனைக்கு போக வேண்டும், மகனை வரச்சொல் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பர்வதம் மகனைத் தேடி சென்றுள்ளார்.

சம்பவ இடத்துக்குப் போய் பார்க்கும்போது சண்முகசுந்தரம் டிராக்டருக்கும், ட்ரெய்லருக்கும் இடையில் தலை சிக்கிக் கொண்டிருந்ததாக சத்தம் போட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து டிராக்டரை ஸ்டார்ட் செய்து டிரெய்லரைத் தூக்கி சண்முகசுந்தரத்தை வெளியில் எடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சண்முகசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment