திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீதரை பீர் பாட்டிலால் குத்திவிட்டு மணிகண்டன் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில்நேற்று (28.06.2021) இரவு, பலியான ஸ்ரீதரின் அண்ணன் கமலக்கண்ணனும் அவருடைய நண்பர்களும் இணைந்து திருச்சி பேட்டை பகுதியில் வந்துகொண்டிருந்த மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் மிதந்த மணிகண்டனை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஸ்ரீதரின் அண்ணன் கமலக்கண்ணனையும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.