Advertisment

வால்பாறையில் கரடி தாக்கி ஒருவர் பலி..!

One passes away by bear attack in Valparai ..!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்துவரும் மோகன் ராஜ், நேற்று (27.07.2021) மாலை தனது மனைவியுடன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது புதர் செடிகளுக்குள் மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென பாய்ந்து தாக்கி, மோகன் ராஜை புதருக்குள் இழுத்துச்சென்றது.

Advertisment

இதை சற்றும் எதிர்பாராத மோகன் ராஜ் வேதனையில் அலற, அந்த அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்து சத்தம் போட்டு, கரடியை விரட்டினர். பின்பு படுகாயமடைந்த அவரை அங்கிருந்து மீட்டு உருளிக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர், மோகன் ராஜின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதையடுத்து சம்பவப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், மோகன் ராஜை தாக்கிய கரடியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

bear Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe