Advertisment

பறிபோன பணம்! உயிரை மாய்த்துக்கொண்ட நபர்! 

One passed away in trichy police investigation

Advertisment

திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் (60). இவர், பாலக்கரையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 7 மாதத்திற்கு முன்னர் ஏலச் சீட்டில் 2 லட்சம் பணம் எடுத்து ஒருவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த நபர் 2 மாத வட்டி பணம் கொடுத்துவிட்டு மீதம் 4 மாதமாக வட்டி பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

அதனால், அந்த நபரை பற்றி சேகர் காந்தி மார்க்கெட் பகுதியில் விசாரித்துள்ளார். அதில், அந்த நபர் பலரிடம் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும், அவர் முகவரி தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். ஏலச் சீட்டு பணம் கட்ட முடியாமல் தவித்து வந்த சேகர் மன உளைச்சலில் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் புலம்பியுள்ளார்.

இந்நிலையில் திடீரென நேற்று அவர் வீட்டின் சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது மகன் பிரவீன் குமார் (34) அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe