Advertisment

இளைஞரை அடித்துக் கொன்ற முதலாளி!

one passed away in kallakurichi district police investigation

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சிறுவள்ளூர் ஊரைச் சேர்ந்தவர் 30 வயது தீபன். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவரிடம் பொக்லைன் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.பொக்லைன் இயந்திரம் ஓட்டி சம்பாதிக்கும் பணம் சம்பந்தமாக தீபன் - அறிவழகன் இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அறிவழகன், தீபனை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த தீபனை உறவினர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று தீபன் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபனின் உறவினர்கள் சங்கராபுரம் நான்குமுனை சந்திப்பில் தீபன் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தீபனை அடித்துக்கொலை செய்த அறிவழகன் உடனடியாக கைது செய்யக் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீபன் கொலை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையின் உறுதி அளித்ததன் பேரில் தீபனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து தீபனின் மனைவி சல்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன் கொலைக்கு காரணமான அறிவழகனைதேடி வருகின்றனர்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe