/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a503.jpg)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கட்சிக் கொடியை வெளியிட்டது குறித்து அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரனிடம் நடிகர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியது தொடர்பாக செய்தியாளர்கள்கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இன்னொருவர் கட்சி ஆரம்பிப்பதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். யார் தேவை யார் தேவையில்லை என்று அவர்கள் தீர்மானிப்பார்கள்'' என்றார்.
மேலும் ''எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை சசிகலாவின் சுற்றுப்பயணம் எடுபடாது'' எனவும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)