தமிழகத்தில் இன்று முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்'!

one nation one ration tamilnadu

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் இன்று (01/10/2020) தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.

சோதனை அடிப்படையில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று (01/10/2020) முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ளோர் நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

one nation one ration Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe