/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CK KUMARAVEL.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுவதாகவும்அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே. குமரவேல் அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகியது குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சி.கே. குமரவேல், "ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும்அவர்களது தவறான வழிநடத்தலுமே காரணம். 233 தொகுதிகள்போனாலும் பரவாயில்லை; ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என கமல் நினைத்தார். தலைவருக்கான தகுதியைக் கமல்ஹாசன் இழந்துவிட்டார். தனிமனித பிம்ப அரசியலைவிட்டு மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். வரலாறு படைப்பதற்குப் பதில் வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோம் என்ற கோபம், ஆதங்கம் உள்ளது. ஏற்கனவே, விலகியவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை உள்ளதை கமலும் அறிவார்" எனத் தெரிவித்தார்.
மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., பத்மபிரியா, முருகானந்தம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)